திண்டுக்கல் அருகே வேடசந்தூர் அருகே மதுபோதையில் நடுரோட்டில் நிர்வாணமாக ரகளையில் ஈடுபட்ட மதுபோதை ஆசாமியால் செய்வதறியாது போலீசார் திகைத்து போகினர்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் ஆத்துமேடு கரூர் செல்லும் சாலையில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் மது அருந்திய போதை ஆசாமி ஒருவர் மதுபான கடையின் அருகே உள்ள சூப்பர் மார்க்கெட் முன்பு நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் இருசக்கர வாகனங்கள் மற்றும் நடந்து செல்லும் பெண்களிடம் ரகளையில் ஈடுபட்டார்.
இதனைக் கண்ட அருகில் இருந்தவர்கள் வேடசந்தூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த மது போதை ஆசாமியிடம் விசாரணை நடத்தும்போது மது போதையில் மட்டையானது போல் நடித்துள்ளார். இதனை நம்பிய காவல் துறையினர் மது போதை தெளிந்த உடன் இந்த இடத்தை விட்டு சென்று விடுவான் என நினைத்து அங்கிருந்து புறப்பட்டனர்.
சிறிது நேரம் கழித்து அந்த மது போதை ஆசாமி காவல்துறையினர் அருகில் இல்லாததை அறிந்து மீண்டும் ரகளை செய்யத் தொடங்கினார். பின்பு மீண்டும் அந்த இடத்திற்கு வந்த காவல்துறையினர் மது போதை ஆசாமியை அடக்க எவ்வளவு முயற்சி செய்தும், அவர் அங்கிருந்து சாலையில் வேகமாக நடந்து சென்றார்.
பரபரப்பான சாலையின் நடுவே வாகனங்களுக்கு இடையே ஓடிக் கொண்டிருந்த குடிபோதை ஆசாமி திடீரென தான் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி விட்டு நிர்வாணமாக நின்று கொண்டு, ‘இப்ப வாங்கடா பாத்துக்கலாம்’ என்று கத்தியபடி சாலையில் படுத்துவிட்டார். இதனை பார்த்த அங்கிருந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் முகம் சுளித்து அங்கிருந்து சென்றனர்.
பின் தொடர்ந்து வந்த சார்பு ஆய்வாளர் பாண்டியன் அங்கு இருந்தவர்களின் கைலி ஒன்றை வாங்கி போதை ஆசாமியின் உடம்பில் சுற்றி அருகிலுள்ள கட்டடத்திற்கு சக காவல்துறையினரின் உதவியோடு ஒரு வாகனத்தில் ஏற்றி அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.
சாலையின் நடுவே நிர்வாணமாக ஓடிய குடிபோதை ஆசாமியால் வேடசந்தூர் பகுதியில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பரபரப்பான சூழல் நிலவியது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.