‘முன்பக்க சீட்டில் தான் உட்காருவேன்’… போதையில் 15க்கும் மேற்பட்டோர் மீது காரை ஏற்றிய இளைஞர்… போலீசாருடன் வீம்பு பேச்சு..!!

Author: Babu Lakshmanan
21 September 2022, 5:37 pm
Quick Share

மதுபோதையில் சாலையில் பல்வேறு வாகனங்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்திவிட்டு, சுமார் 25 கி.மீ வரை காரை ஓட்டி வந்த நபரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

தஞ்சை – திருச்சி சாலையில் , திருச்சி நோக்கி வந்த வெள்ளை நிற ஸ்கார்பியோ கார் ஒன்று அசுர வேகத்தில் சென்றது. இந்த காரை ஓட்டி வந்த நபர் தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி, வளம்பக்குடி திருச்சி மாவட்டம் துவாக்குடி, பாய்லர், திருவெறும்பூர், கைலாஷ் நகர் உள்ளிட்ட இடங்களில் 3 பெல் ஊழியர்கள் உட்பட 15 பேர் மீது மோதி விபத்து ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்றது.

இது குறித்து உடனடியாக காவல்துறை வயர்லெஸ் குளம் அனைத்து காவல் செக் போஸ்ட்களையும் அலார்ட் செய்தனர். அப்போது அந்த கார் காட்டூர் ஆயில்மில் செக் போஸ்டில் தடுப்பு கட்டைகளை மீறி சென்றது.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர், அந்த ஸ்கார்பியோ காரை அரியமங்கலம் பால்பண்ணை ட்ராபிக் சிக்னலில் மடக்கி பிடித்தனர். அதில் மதுபோதையில் காரை ஓட்டிவந்த நபரிடம் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தஞ்சை மாவட்டம் மெடிக்கல் காலேஜ் சேர்ந்த ஆரோக்கிய லூர்து நாயகம் என்பதும், அதிக மது போதையில் 50 கி.மீ தூரம் காரை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.

காரின் முன்பக்க டயர் தேய்ந்து ரிம்முடன் அந்த காரை போதை ஆசாமி ஓட்டி வந்துள்ளான். மேலும், திருச்சி மாவட்டம் திருவரம்பூர் பகுதியில் கடைசியாக விபத்து ஏற்பட்டதால், அந்த நபரை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்க ஜீப்பில் ஏற்றிய போது, என்னை முன்பக்க சீட்டில் உட்கார வையுங்கள் என சைக்கோ தனமான நடந்து கொண்டான்.

இதனைத் தொடர்ந்து, அந்த நபரை திருவெறும்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து அந்த கார் யாருடையது, இவன் மதுபோதையில் காரை ஓட்டி வந்தாரா? அல்லது வேறு ஏதும் போதை வஸ்துக்களை உட்கொண்டு ஓட்டி வந்தாரா? எத்தனை பேர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ளான்? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 508

0

0