போதையில் பேருந்தில் பள்ளி மாணவன் தகராறு ; காவல்நிலையத்திற்கு வண்டிய திருப்பிய ஓட்டுநர்… போலீசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Author: Babu Lakshmanan
17 August 2022, 4:28 pm
Quick Share

கரூர் : குளித்தலை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவன், குடிபோதையில் பேருந்து ஓட்டுநர் மற்றும் போலீசாரை தகாத வார்த்தையில் திட்டிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் குளித்தலையில் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் நேற்று பள்ளிக்கு வராமல் சீருடையில் மது மற்றும் கஞ்சா பயன்படுத்தி உள்ளான். பெற்றோருக்கு தெரியாமல் இருப்பதற்கு வழக்கம் போல, பள்ளிக்கூடம் முடித்து செல்லும் போக்கில் போதையில் பேருந்தில் ஏறி உள்ளான்.

ஏறும் போதே டிரைவர் மற்றும் கண்டகரிடம் தவறான கெட்ட வார்த்தையில் பேசி உள்ளான். மேலும் அந்த பள்ளியை சேர்ந்த சக மாணவர்கள் பலரும் கூச்சல் சண்டை இடவே, பேருந்தை குளித்தலை காவல் நிலையம் அருகே டிரைவர் பேருந்தை நிறுத்தி காவல் நிலையத்துக்கு வந்து தகவல் அளித்தார்.

அதன் பேரில் வந்த காவலர் மற்றும் பெண் காவலர்கள் வந்து பேருந்தை சோதனை இட்டு மாணவர்களை எச்சரிக்கை செய்தனர். பேருந்தின் உள்ளே உள்ள மது போதை மாணவன் பெண் காவலரை கெட்ட வார்த்தையல் திட்டி உள்ளான். அந்த மாணவனை பேருந்தின் உள்ளே சென்று பார்த்த போது அந்த மாணவன் முழு போதையில் இருப்பது தெரிய வந்தது.

மேலும், பேருந்தை இயக்க அந்த மாணவனை கீழ் இறக்கி அவனுக்கு தண்ணீர் தெளித்து அவனது வீட்டிற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்த பெற்றோர் அவனை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

இது குறித்து டிரைவர் மற்றும் கண்டகரிடம் கேட்ட போது:- இது போன்ற நிகழ்வு தினமும் நடக்கிறது. எங்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. மீறி பேசினால் சக மாணவர்கள் ஒன்று சேர்ந்து எங்களை தகாத வார்த்தையில் மிரட்டுகின்றனர். இது போன்று தினமும் நடப்பதால் பொறுத்து கொள்ள முடியாமல், இன்று நாங்களே காவல் நிலையம் முன்பு பேருந்தை நிறுத்தி புகார் அளித்தோம், என்று தெரிவித்தனர்.

மேலும், பள்ளி தலைமை ஆசிரியர் கூறியதாவது ; அந்த பள்ளி மாணவன் பள்ளிக்கு வருவதே இல்லை என்றும், இது பள்ளியில் நடக்க வில்லை, என தெரிவித்தார்.

Views: - 484

0

0