நெருங்குது ஓணம்… நெருக்கும் பூக்களின் விலை : தொடர் விஷேச நாட்களால் பூ விலை உயர்வு.. வியாபாரிகள் மகிழ்ச்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
6 September 2022, 10:59 am
Flower RAte High - Updatenews360
Quick Share

8ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் கேரள மாநிலம் பாலக்காடு, மன்னார்காடு ஆகிய இடங்களுக்கு கோவையில் இருந்து அதிகப்படியான பூக்கள்(மல்லி, முல்லை, கலர் பூக்கள்) ஏற்றுமதி செய்யப்படும்.

இந்நிலையில் இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி, ஓணம் பண்டிகை, முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக இருந்து வருவதால் பூக்களின் விலை உயர்ந்த வண்ணமே உள்ளது.

இந்நிலையில் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை வரவுள்ளதை ஒட்டியும் முகூர்த்த நாட்கள் தொடர்ச்சியாக வருவதனாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

இது குறித்து பூ வியாபாரிகள் கூறுகையில், மல்லி முல்லை பூக்கள் 8ம் தேதி வரை நல்ல விலை இருக்குமென தெரிவித்தனர். முகூர்த்த நாட்கள் எல்லாம் சேர்ந்து வரும் போது இன்னும் விலை அதிகரிக்கும் என கூறினர்.

கலர் பூக்களை பொறுத்தவரை ஓணம் பண்டிகையை ஒட்டி தான் அதிகமாக வியாபாரம் செய்யபடும் எனவும் இது வருடத்திலேயே மிக பெரிய கலர் பூக்கள் வியாபாரம் எனவும் தெரிவித்தனர்.

8ம் தேதி வரை விலை உயர்வு இருக்கும் எனவும் கூறினர். கோவையில் இருந்து செண்டு மல்லி அதிகம் வியாபாரம் செய்யப்படும் என கூறிய அவர்கள் ரோஜா, அரளி ஆகியவை சுமார் 300 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுமென தெரிவித்தனர்.

மல்லி, முல்லை ஆகியவை 1000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படும் எனவும் ஓணம் பண்டிகை நெருங்க நெருங்க இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தனர்.

அதே சமயம் கேரளாவில் மழை இருந்தால் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் கூறினர். இன்றைய தினம் செண்டுமல்லி 60ரூ, வெள்ளமல்லி 240ரூ, வாடாமல்லி 120ரூ, கலர் செவ்வந்தி 320ரூ, அரளி 200ரூ, ரோஜா 240ரூ, மல்லிகை 1200ரூ க்கும் விற்பனை செய்யப்படுவதும் குறிப்பிடத்தக்கது.

Views: - 446

0

0