ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை உயர் நீதிமன்றம் தடை!

26 March 2020, 10:12 pm
High Court updatenews360
Quick Share

கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு ஆக்கிரமிப்பு அகற்ற மற்றும் கட்டிடங்களை இடிப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடைகள், ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், ஆக்கிரமிப்பு அகற்றவும், இடத்தை காலி செய்யவும் கட்டிடங்கள் இடிக்கவும் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை அமல்படுத்தும் உத்தரவுகளை, ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்தது.

நீதிமன்ற தடை உத்தரவுகள் காலாவதியாவதால், அவற்றை நீட்டிக்கக்கோரி வந்த கோரிக்கைகளை தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றம் இத்தகையக உத்தரவை பிறப்பித்தது.

ஊரடங்கு அமலில் இருப்பதால், நீதிமன்றத்தை நாட முடியாது என்பதை சுட்டிக்காட்டி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில்,  நீதிபதிகள் சத்தியநாராயணன், அப்துல் குத்தூஸ் அமர்வு இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது.

அத்துடன், இடைக்கால ஜாமீன் உத்தரவுகளும், பரோல் உத்தரவுகளும் நீட்டிக்கப்படுவதாகவும், தடை உத்தரவுகள் நீட்டிப்பால் பாதிப்பு ஏற்பட்டால் அரசும், சம்பந்தப்பட்டவர்களும் உரிய நிவாரணத்தை தேடிக் கொள்ளலாம் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Leave a Reply