மக்களே உஷார்… பொங்கலும் அதுவுமா ஏமாந்துடாதீங்க : நகைகளில் போலி அக்மார்க் முத்திரை… 11 லட்சம் மதிப்பிலான நகைகள் பறிமுதல்!!

Author: Babu Lakshmanan
13 January 2022, 9:51 am
Quick Share

கோவை : தங்க நகைகளில் 916 போலி அக்மார்க் முத்திரைகளை இட்டு, விற்பனை செய்யப்படவிருந்த 11 லட்சம் மதிப்பிலான நகைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு போலி நகைகளை விற்க முயல்வதை தடுக்க நடவடிக்கை காலாவதியான லைசென்ஸ், போலி லைசென்ஸ் பயன்படுத்தி சட்ட விரோத முத்திரை இடும் பணி பொங்கல் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் தங்கங்களை வாங்குவது வழக்கமானதாகும்.

இந்த நிலையில் பொதுமக்களின் ஆர்வத்தை பயன்படுத்தி ஆஃபர் முறையில் தங்க நகைகள் தரப்படுமென நகை கடைகள் அறிவிக்கின்றன.

நகை கடைகளில் ஆஃபர் நியாயமான முறையில் தரப்பாட்டலும் இந்த பண்டிகை காலத்தினை பயன்படுத்தி போலி நகைகள் விற்கப்படுகின்றன. இந்திய தர நிர்ணய அமைவன அதிகாரி மீணாட்சி தலைமையில் 10 பேர் கொண்ட குழு, குறிப்பிட்ட சில கடைகளில் சோதனை நடத்தியது. அப்போது, 916 போலி அக்மார்க் முத்திரைகளை இட்டு, விற்பனை செய்யப்படவிருந்த 11 லட்சம் மதிப்பிலான நகைக்கடைகளை பறிமுதல் செய்தனர்.

Views: - 225

0

0