தமிழகத்திற்கு கிரீஸ்கர்மா விருதினை பெற்று தந்தவர் துரைகண்ணு: அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம்

1 November 2020, 9:49 pm
Quick Share

கன்னியாகுமரி: தமிழகத்திற்கு மத்திய அரசின் கிரீஸ்கர்மா விருதினை பெற்று தந்தவர் என்று மறைந்த அமைச்சர் துரைகண்ணுவுக்கு தமிழக செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ புகழாரம் சூட்டினார்.

உடல்நல குறைவு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்படு சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்மை துறை அமைச்சர் துரைகண்ணு நேற்று இரவு மரணமடைந்தார். அவரது உருவப்படம் கன்னியாகுமரி அரசினர் விருந்தினர் மாளிகையில் அலங்கரிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், செய்தி, விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, முன்னாள் அமைச்சர், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியினர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் நடந்த இரங்கல் கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசியதாவது:- மறைந்த அமைச்சர் துரைகண்ணு முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாகவும், விசுவாசமாகவும் இருந்தவர். அவர் கட்சியிலும், அரசிலும் பல்வேறு பதவிகளை வகித்தவர். கடந்த 2006, 2011, 2016 ஆகிய மூன்று முறை எம்எல்ஏவாக வெற்றி பெற்றவர். தற்போது வேளாண்துறை அமைச்சராக பணியாற்றி வந்தவர். அவர் பணியாற்றிய காலத்தில் மத்திய அரசின் க்ரீஸ்கர்மா விருதினை 5 முறை பெற்று தந்து தமிழக வேளாண்துறைக்கு பெருமை சேர்த்தவர். இவ்வாறு அவர் பேசினார்.

Views: - 68

0

0