கோவில் கோவிலாக வழிபாடு நடத்தும் துர்கா ஸ்டாலின் : சமயபுரத்தை தொடர்ந்து ஸ்ரீரங்கம் கோவிலில் சிறப்பு தரிசனம்!!

Author: Udayachandran RadhaKrishnan
7 October 2021, 5:33 pm
Srirangam Durga Stalin -Updatenews360
Quick Share

திருச்சி : ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் ஆலயத்தில் துர்கா ஸ்டாலின் சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு முன் பிரசித்தி பெற்ற கோவில்களில் தமிழக முதலமைச்சரின் மனைவி துர்கா ஸ்டாலின் வழிபட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று முதல் துர்கா ஸ்டாலின் பல்வேறு கோவில்களில் வழிபட்டு வந்தார். திமுக தேர்தலில் வெற்றி பெற்று ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என பல கோவில்களுக்கு சென்று வழிபட்டதாக செய்திகளும் வெளியானது. தற்போது வேண்டுதல் நிறைவேறியதால் கடந்த வாரம் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டார். அந்த வகையில் இன்று ஸ்ரீரங்கம் கோவிலில் வழிபாடு செய்தார்.

108 திவ்ய ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என்று போற்றப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோவிலுக்கு தமிழக மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல நாடுகளிலிருந்தும் பக்தர்கள், சுற்றுலா பிரியர்கள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில் தமிழக முதல்வரின் மனைவியார் துர்கா ஸ்டாலின் இன்று காலை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் ஆலயத்தில் உள்ள கருடாழ்வார், ஆரியபட்டா வாசல் வழியாக அரங்கநாதர், பின்ன ரங்கநாயகி தாயாரை தரிசனம் செய்தார்.

ஸ்ரீரங்கம் கோவிலின் நிர்வாகம் சார்பிலும், தலைமை பட்டர் சுந்தர் சார்பிலும் திருமதி துர்கா ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதே போல் நேற்று மகாளய அமாவாசையை முன்னிட்டு சமயபுரத்தில் உள்ள அருள்மிகு மாரியம்மனை தரிசனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 525

0

0