கால் முறிந்தாலும் கடமைதான் முக்கியம் : மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த இளைஞர் ஆம்புலன்சில் வந்து வாக்களித்த நெகிழ்ச்சி சம்பவம்!!

Author: Udayachandran RadhaKrishnan
19 February 2022, 2:40 pm
Ambulance Youth Cast Vote -Updatenews360
Quick Share

திருப்பூர் : பத்மாவதி புறத்தை சேர்ந்த ஜானகி ராமன் என்ற இளைஞர் கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் ஆம்புலன்ஸில் வந்து தனது வாக்கை பதிவு செய்தார்.

திருப்பூர், பத்மாவதி புறத்தை சேர்ந்த மதன கோபால் என்பவரது மகன் ஜானகி ராமன் (வயது 20). கடந்த பத்து நாட்களுக்கு முன்பாக சாலை விபத்தில் கால் முறிவு ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் மாநகராட்சி தேர்தலில் தனது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற விரும்பினார்.

அதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர் உதவியுடன் தனியார் மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸில் பயணம் செய்து, திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்கு வந்து தனது வாக்கினை பதிவு செய்தார்.

கால் முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனம் தளராத இளைஞர் ஜனநாயக கடமையை ஆற்றியது வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 1038

0

0