இனி கேரளா செல்ல இ-பாஸ் கட்டாயம்: எல்லைகளில் கேரள போலீஸ் கெடுபிடி..!!

19 April 2021, 4:20 pm
Quick Share

கோவை: தமிழகத்தில் இருந்து கேரளா சொல்வோருக்கு இன்று முதல் இ பாஸ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், எல்லையில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை மிக தீவிரமடைந்துள்ளது. இதனால் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேரளாவில் திருமணம் உள்ளிட்ட பொது நிகழ்ச்சிகள் நடத்த இணையதளம் மூலம் அனுமதி பெற வேண்டும்.

அதே சமயம் 75 முதல் 100 பேர் வரை அனுமதிக்கப்படுவார்கள், உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் மட்டும் கேரளாவில் 13,835 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கேரள எல்லைகளில் அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது.

குறிப்பாக வாளையாறு, வேலந்தாவலம் உள்ளிட்ட 13 சோதனை சாவடிகள் மூடப்பட்டு கோவை வழியாக கேரளா சொல்வோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இ-பாஸ் பெறாமல் வரக்கூடிய பொதுமக்கள் திருப்பி அனுப்பட்டு வருகின்றனர். இன்று முதல் நாள் என்பதால் சோதனை சாவடிகளில் இருந்தவாறு இ-பாஸ் பதிவு செய்ய வைத்து அனுப்புகின்றனர். நாளை முதல் இபாஸ் பெறாமல் வருவேர் கட்டாயமாக திரும்பி அனுப்பப்படுவார்கள் என கேரள போலீஸ் தெரிவித்துள்ளனர்.

கேரளாவிலிருந்து கோவை சென்று திரும்புவோர் 48 மணி நேரத்திற்குள் எடுத்த ஆர்.டி.பி.சி.ஆர் சான்றிதழ் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் கடும் வெயில் உள்ளதால் நிழலான இடத்தில் பொதுமக்களை நிறுத்தி சோதனை செய்ய வேண்டும் என இங்கு வரும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர.

Views: - 78

1

0