பொதுமக்களுக்காக இ-பாஸ் எளிமை : முதலமைச்சர் பேச்சு

20 August 2020, 10:49 am
CM Speech- Updatenews360
Quick Share

வேலூர் : பொதுமக்கள் நலன் கருதி இ-பாஸ் எளிமையாக்கப்பட்டதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில வேலூர் ராணிப்பேட்டை, திருப்பத்தூர் வளர்ச்சி பணி மற்றும் கொரோனா தடுப்பு குறித்து ஆலோசனையில் முதலமைச்சர் பங்கேற்றார்.

ஆலோசனை கூட்டத்தில் முதலமைச்சர் பேசும் போது, பொதுமக்கள் நலன் கருதியே இ-பாஸ்ஸில் தளர்வு ஏற்படுத்தப்பட்டதா ககூறினார். அத்தியாவசியத் தேவைக்காக மட்டுமே இ-பாஸ் பெற விண்ணப்பிக்க வேண்டும். அத்தியாவசியத் தேவைக்காக மட்டும் வெளியே செல்ல வேண்டும், தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தினார்.

மருத்துவ நிபுணர் குழு அளிக்கும் ஆலோசனைகளை தமிழக அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. காய்ச்சல் முகாம்கள் காரணமாக, தமிழகத்தில் கொரோன நோய் பரவல் கட்டுக்குள் உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் காய்ச்சல் முகாம் நடத்தப்படுவதாக தெரிவித்தார்.

இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழகம்தான் என கூறிய முதலமைச்சர், பொதுமக்கள் ஒத்துழைத்தால் மட்டுமே கொரோனாவை ஒழிக்க முடியும் என கூறினார். இந்த சூழ்நிலையில் முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் எச்சரிக்கையாக பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

Views: - 30

0

0