தமிழகத்தில் ரத்தாகிறது இ-பாஸ் நடைமுறை : அமைச்சர் தகவல்!!

24 August 2020, 11:40 am
RB Udayakumar - Updatenews360
Quick Share

சென்னை : மத்திய அரசு உத்தரவுப்படி விரைவில் தமிழகத்தில் இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்படும், அதற்கான அறிவிப்பை முதலமைச்சர் வெளியிடுவார் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பட்டாளத்தில் உள்ள கொரோனா தடுப்பு முகாம் மற்றும் பரிசோதனை மையத்தை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் 28 சதவீதம் அளவுக்கு கூடுதலாக தென்மேற்கு பருவமழை பெய்துள்ளதாக தெரிவித்த அவர்,பவானி சாகர், மணி முத்தாறு, பெருஞ்சாணி, பெரியா, அமராவதி, திருமூர்த்தி அணைகளில் கடந்த ஆண்டை விட நீரின் அளவு அதிகரித்துள்ளதாகவும் கூறினார்.

ஆனால் பாபநாசம், மேட்டூர், கிருஷ்ணகிரி, சோலையாறு அணைகளில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நீரின் அளவு குறைந்துள்ளதாக தெரிவித்த அவர், சென்னையில் குடிநீர் ஆதாரமாக விளங்கும் நீர் தேக்கங்களில் நீரின் அளவு கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் அதிகமாக உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் மத்திய அரசு உத்தரவுப்படி இ-பாஸ் நடைமுறையை புதுச்சேரி மாநிலம் ரத்து செய்துள்ளது போல தமிழகத்திலும் ரத்து செய்யப்படும். அதற்காக முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொண்டு விரைவில் அது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்றும் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்தார்.

Views: - 1

0

0