தொடர் மழை எதிரொலி : ஒரே நாளில் இரண்டு அடி உயர்ந்த அமராவதி அணை!!

17 June 2021, 7:09 pm
amaravathy Dam - Updatenews360
Quick Share

திருப்பூர் : தொடர் மழையின் காரணமாக அமராவதி அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஒரே நாளில் அணையின் நீர் மட்டம் இரண்டு அடி உயர்ந்துள்ளது.

கேரள மானிலத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியுள்ள நிலையில்,அங்கு கன மழை பெய்து வருகிறது.இதன் காரணமாக மேர்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள சோலையாறு, பரம்பிக்குளம், ஆழியாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே அமைந்துள்ள அமராவதி அணையின் நீர் பிடிப்பு பகுதிகளாக உள்ள மூணாறு, காந்தலூர், வால்பாறை,அக்காமலை புல்வெளி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில்,அமராவதி அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2750 கன அடியாக அதிகரித்துள்ளது.

நேற்று காலை அணையின் கொள்ளளவான 90 அடியில் 75,25 அடியாக இருந்த நிலையில்,தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து ஒரே நாளில் 2 அடி நீர் மட்டம் உயர்ந்து இன்று காலை 77.50 அடியாக உள்ளது.

தொடர்ந்து அணைக்கு வரும் நீரின் அளவு 2750 கன அடியாக அதிகரித்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறனர்.

Views: - 270

0

0