கோவையில் கனமழை எதிரொலி : கோவில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து விபத்து.! உயிர்தப்பிய பக்தர்கள்!!

Author: Udayachandran RadhaKrishnan
20 October 2021, 7:03 pm
Rain Temple Wall Damaged -Updatenews360
Quick Share

கோவை : தொடர் மழை காரணமாக கோவை கணபதி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் பக்தர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

கோவை கணபதி, கட்டபொம்மன் வீதியில், கருப்பராயன் கோவில் உள்ளது. இந்த பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் கடந்த 30 வருடத்திற்கு மேலாக அதே பகுதியில் கருப்பராயன் கோவில் உருவாகி சுற்றுச்சுவர் எழுப்பி மரத்திற்கு அடியில் தொடர்ந்து பூஜைகள் அபிஷேகங்கள் செய்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது .

இந்த நிலையில் கோவையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் திடீரென சுற்றுசுவர் இடிந்து விழுந்து தரைமட்டமானது. சுவர் இடிந்து விழும் பொழுது அந்த பகுதியில் பக்தர்கள் இல்லாத காரணத்தினால் அதிர்ஷ்டவசமாக காயம் மற்றும் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், “நாங்கள் பல ஆண்டுகளாக கருப்பராயன் கோயிலை பாதுகாத்து வணங்கி வருகிறோம். இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு எங்களுக்கு சிறந்த ஒரு கோவிலை உருவாக்கி தர வேண்டும். ஒரு பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. அதை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும்.

அடுத்த பகுதியில் உள்ள சுற்றுச்சுவர் விழுவதற்கு தயாராக உள்ளது. அதை மாநகராட்சி நிர்வாகம் தலையிட்டு அப்புறப்படுத்தி எங்களுக்கு விரைவில் பாதுகாப்பான சுற்றுச்சூழல் கூடிய கோயில் உருவாக்கித் தரவேண்டும். ” என்றனர்.

Views: - 204

0

0