கனமழை எதிரொலி… வெள்ளத்தில் தத்தளித்த குமரி மக்கள் : மீட்பு பணியில் தீயணைப்புத்துறையினர்!!

Author: Udayachandran RadhaKrishnan
17 October 2021, 6:12 pm
Kumari People Rescued -Updatenews360
Quick Share

கன்னியாகுமரி : தொடர் மழை எதிரொலியால் அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் மழை நீர் வீடுகளிலும் புகுந்ததால் மக்கள் வெள்ளத்தில் சிக்கினர்.

குமரி மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக இரவு,பகலாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு1, சிற்றாறு 2 உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்தது.

இந்த நிலையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு மாற மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
இந்த நிலையில் இன்று காலையில் இருந்து பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 20 ஆயிரம் கன அடி நீர் 15 ஆயிரமாக குறைக்கபட்டும் பெருஞ்சாணியில் இருந்து வெளியேற்றப்பட்டு வந்த 12 ஆயிரம் கன அடி நீர் 7 ஆயிரமாகவும் குறைக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து அணைகளிலிருந்து திறந்து விடப்படும் உபரி தாமிரபரணி ஆற்றில் கலந்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், குழித்துறை, முஞ்சிறை,மங்காடு,வைகக்லூர் ,பண முகம் போன்ற கிராமங்களில் புகுந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகளில் ஏராளமான மக்கள் தவித்து வருகின்றனர்.

தொடர்ந்து தீயணைப்பு துறை வீரர்கள் மற்றும் பொதுமக்கள் படகு மூலம் அவர்களை மீட்டு கொண்டு வருகின்றனர். மேலும் ஏராளமான மக்களளை மீட்க தீயணைப்பு வீரர்களை ஈடுபடுத்தி மீட்பு பணியை துரித படுத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Views: - 470

0

0