வார விடுமுறை எதிரொலி : கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்!!

Author: Udayachandran RadhaKrishnan
10 October 2021, 7:11 pm
Kodaikanla Crowd -Updatenews360
Quick Share

திண்டுக்கல் : வார விடுமுறையை கொண்டாட கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள் குளு குளு சூழலால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கபடும் கொடைக்கானலில் வார விடுமுறையை கொண்டாட முக்கிய சுற்றுலா தலங்களான மோயர் சதுக்கம் , குணா குகை , தூண் பாறை உள்ளிட்ட இடங்களில் குவிந்தனர்.

மேலும் இன்று காலை முதல் லேசான வெயிலும் அவ்வப்போது லேசான சாரல் மழையும் மலைகளை உரசி செல்லும் மேககூட்டங்கள், இயற்கை எழில் காட்சிகளுடன் செல்பி எடுத்தும் நகரின் மைய பகுதியில் அமைந்திருக்கும் ஏரியில் படகு சவாரி செய்தும் மகிழ்ந்தனர்.

Views: - 428

0

0