எடப்பாடி பழனிச்சாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி திடீர் டெல்லி பயணம்

Author: Udhayakumar Raman
25 July 2021, 10:44 pm
Quick Share

கோவை: முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி திடீர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் திடீர் பயணமாக எவ்வித முன்னறிவிப்பும் இன்றி டெல்லி சென்றுள்ளார். அதன் தொடர்ச்சியாக, சேலத்தில் இருந்து கோவை விமான நிலையம் வந்த முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். ஓபிஎஸ் உடன் மனோஜ் பாண்டியன் சென்றுள்ள நிலையில், ஈபிஎஸ் உடன் முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி, சென்றுள்ளார். அதிமுக மூத்த தலைவர்கள் திடீர் டெல்லி சென்றுள்ளது,மக்கள் மத்தியில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியை நாளை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகள், உள்ளாட்சி தேர்தல், அரசியல் சூழ்நிலை குறித்து பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 198

0

0