அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக 4 பிரிவாக அதிமுக பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நாடாளுமன்ற தேர்தலில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார்.
இதன் காரணமாக தமிழகம் முழுவதும் தொண்டர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்யும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த சில நாட்களாக காலில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து காலில் சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதனால் நீண்ட நேரம் காலை ஒரே இடத்தில் வைக்க முடியாத நிலையானது எடப்பாடி பழனிசாமிக்கு உருவானது. இதன் காரணமாக சேலத்திலேயே 20 நாட்களுக்கு மேல் தங்கியிருந்து ஓய்வு எடுத்து வந்தார்.
சென்னை வந்த அமித்ஷாவை பார்க்க கூட எடப்பாடி பழனிசாமியால் வர முடியாத நிலையில் இருந்தார். இதனையடுத்து நீண்ட நேர பயணங்களுக்கு எப்போதும் இன்னோவா மற்றும் டெம்போ டிராவலரை மட்டும் எடப்பாடி பயன்படுத்தி வந்தார். இந்தநிலையில் அதில் கால் வைக்க குறுகிய இடமாக இருப்பதால் புதிய வகை காருக்கு மாற திட்டமிட்டார்.
இதனையடுத்து நேற்று சேலத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள வந்த எடப்பாடி பழனிசாமி force நிறுவனத்தின் urbania வகை வாகனத்தை பயன்படுத்தினார். மேலும் நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருப்பதால், அதற்கு வசதியாக இந்த புதிய வாகனம் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.