கடந்த 2011 ஆம் ஆண்டு ஜெயலலிதா தமிழக முதல்வராக பதவி ஏற்றதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இலவச மடிக்கணிணி திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன் மூலம் பல ஏழை எளிய மாணவர்கள் பயன்பெற்றனர். எனினும் 2016 ஆம் ஆண்டு ஜெயலலிதா மறைந்த பின் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பொறுப்பேற்றார்.
அதனை தொடர்ந்து வந்த தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலுக்கான சூழல் சூடுபிடித்து வருகிறது. அந்த வகையில் “மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார். இதில் அதிமுகவின் சாதனைகள் குறித்தும் திமுகவை விமர்சித்தும் பேசி வருகிறார்.
இந்த நிலையில் இன்று தென்காசியில் பரப்புரையில் ஈடுபட்ட எடப்பாடி பழனிசாமி, அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என உறுதியளித்துள்ளார். மேலும் அவர், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் தமிழகத்தில் 4000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்படும் எனவும் எடப்பாடி பழனிசாமி பரப்புரை செய்துள்ளார். இது பலரின் கவனத்தை குவித்துள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.