போயஸ் கார்டன் முதல் மெரினா வரை : சசிகலாவை மிரளச் செய்த எடப்பாடியாரின் ”மாஸ்டர் பிளான்”!!

4 February 2021, 6:55 pm
Sasi Vs Edappadi- Updatenews360
Quick Share

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் இருந்து தண்டனை காலத்தை முடித்து தற்போது பெங்களூருவில் இருக்கும் சசிகலாவுக்கு பல்வேறு முட்டைக்கட்டைகளை போட்டு வருகிறார் எடப்பாடியார்.

சசிகலா 4 வருட தண்டனையை அனுபவித்து கொண்டிருந்த வேளையில், முதலமைச்சராக பொறுப்பேற்றிருந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியை தன் வசப்படுத்தி தற்போது அதிமுகவையும் தன்வசப்படுத்தியுள்ளார். தண்டனையை முடித்து விடுதலையான சசிகலா மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டார்.

Image result for sasikala hospital

இந்த இடைவெளியில் போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தை அரசுடைமயாக்கி சசிகலாவுக்கு ஆப்படித்தார் எடப்பாடியார். சசிகலா சென்னை வந்ததும் ஜெ., நினைவிடத்தில் மீண்டும் சபதம் எடுத்து விடக்கூடாது என்பதற்காக பராமரிப்பு காரணம் காட்டி ஜெ நினைவிடம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் வரும் 8ஆம் தேதி சசிகலா தமிழகம் வருகிறார். அதிமுகவில் பெரும்பாலான அமைச்சர்கள், நிர்வாகிகள், எம்எல்ஏக்கள் எடப்பாடியாருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். முன்னாள் நிர்வாகிகள், பதவியில்லாமல் தவிப்பவர்கள், புதிய பதவியை தேடுபவர்கள் மட்டும் உளைச்சலில் உள்ளனர்.

அதிமுக மீது புகைச்சலில் இருக்கும் சில நிர்வாகிகளை சமாளிப்பதில் எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய தலைவலியாக உள்ளது. சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து போஸ்டர் ஒட்டி தங்களது ஆதங்கத்தை தெரிவித்தவர்கள் பதவி எதிர்ப்பாத்து ஏமாந்து போனவர்கள்தான் என்று கூறப்படுகிறது.

Image result for ஜெயலிலதா வேதா இல்லம்

இப்படியே சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்து வந்தால், சசிகலாவிடம் அதிமுக செல்லும் போது, போஸ்டர் அடித்தவர்கள், ஆதரவு தெரிவித்தவர்களுக்கு பதவி கிடைக்கும் என்பது அதிமுக மீது அதிருப்தியில் உள்ளவர்களின் கணக்கு.

இப்படி பல்வேறு சிக்கல்கள் இருந்தாலும், அதிமுக தொண்டர்கள் மத்தியில் சசிகலாவை டம்மியாக்க எடப்பாடியார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் வீடு அரசுடைமயாக்கப்பட்டது, மெரினாவில் உள்ள ஜெ நினைவிடத்தில் பராமரிப்பு பணி என பூட்டப்பட்டிருப்பது எல்லாம் சசிகலா அங்கு செல்வதை தடுக்கவே என அரசல் புரசலாக கூறுகிறார்கள்.

Image result for ஜெயலிலதா நினைவிடம்

25 வருடமாக ஜெயலலிதாவுடன் வேதா இல்லத்தில் வாழ்ந்த சசிகலாவுக்கு, ஒரு வேளை இல்லம் நினைவிடமாக மாற்றாமல் இருந்தால் அதை சுலபமாக அவர் அரசியல் செய்து விடலாம் என்று முன்கூட்டியே அரசுடமையாக்கப்பட்டது எடப்பாடியாரின் மாஸ்டர் பிளான் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் கூறப்படுகிறது.

சசிகலா எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும், முட்டுக்கட்டை போடும் எடப்பாடியாரின் கணக்கு நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து தான் காண முடியும்.

Views: - 1

0

0