“பைக்“ மீது மினிலாரி மோதி பயங்கர விபத்து : வெளியான சிசிடிவி காட்சி!!

14 September 2020, 4:53 pm
Erode Accident- updatenews360
Quick Share

ஈரோடு : கோபிசெட்டிபாளையம் அருகே இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள மொடச்சூர் பிரதான சாலையில் ஈரோட்டில் இருந்து வந்து கொண்டிருந்த சரக்கு லாரி திடீரென இடதுபுறமாக திரும்பியது.

அப்போது லாரியின் இடப்புறம் சென்று கொண்டிருந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது. விபத்தில் இரு சக்கர வாகனம் லாரியின் முன்பக்கத்தில் மாட்டிக்கொண்டதால் லாரி நகர முடியாமல் நின்றது மேலும் இருசக்கர வாகனத்தில் வந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

பின்னர் அங்கிருந்த போக்குவரத்து காவலர் லாரி ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்தனர். இச்சம்பவம் அருகிலிருந்த உணவகத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Views: - 12

0

0