தம்பியை சுத்தியலால் அடித்து கொன்ற அண்ணன்!!

13 September 2020, 12:14 pm
Brother Killed - Updatenews360
Quick Share

ஈரோடு : அண்ணன் தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியின் தலையில் அண்ணன் சுத்தியால் தாக்கியதில் தம்பி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் அடுத்துள்ள கமலா நகரை சேர்ந்தவர் மனோகரன். இவர் தனது சங்கர் மற்றும் தினேஷ் ஆகிய இரு மகன்களுடன் வசித்து வருகிறார். கட்டிட தொழிலாளியான மனோகரன் தனது இரு மகன்களும் கூலித் தொழில் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு அண்ணன் சங்கர் மற்றும் தம்பி தினேஷ் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் கோபமடைந்த தினேஷ் சங்கரை தாக்கியுள்ளார் இதில் அண்ணன் சங்கர் சிறிய காயங்களுடன் நேற்றிரவு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சங்கர் தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருந்த தம்பி தினேஷ் வீட்டில் இருந்த சுத்தியல் வைத்து பின்தலையில் அடித்துள்ளார் இதில் சம்பவ இடத்திலேயே தினேஷ் உயிரிழந்தார்.

இதனையடுத்து மனோகரன் தகவல் அளித்ததன் பேரில் கருங்கல்பாளையம் காவல்துறையினர் தினேஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் காவல் துறையினர் சங்கர் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் . இச்சம்பவம் அப்பகுதி என்னுடைய அப்பகுதியினர் இடையே பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 0

0

0