கோவை அரசு மருத்துவமனையில் கார் திருடிய முதியவர் கைது : இரண்டு கார், உயர் ரக பைக்குகள் பறிமுதல்!!

Author: Udayachandran RadhaKrishnan
30 June 2021, 8:34 pm
Bike Thief Arrest - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் அரசு மருத்துவமனைக்கு வந்திருந்தவரின் காரை திருடிச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் (வயது 28). இவர் கோவை அரசு மருத்துவமனைக்கு செல்வதற்காக கோவை அரசு கலைக் கல்லூரி சாலையில் தனது மாருதி 800 காரை பார்க் செய்துவிட்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

சற்று நேரம் கழித்து அரசு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்து தனது காரை பார்த்தபொழுது கார் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ளவர்களிடம் இது குறித்து கேட்டுள்ளார்.

இவரது காரை யாரும் பார்க்கவில்லை என கூறியதால் பந்தய சாலை காவல் நிலையத்தில், நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொழுது, திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த, ராஜா (எ) ஆரோக்கிய சகாய தர்மராஜ் (வயது 56) என்பவர் இவரது காரை திருடி சென்றதை கஙணடறிந்தனர்.

தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் விசாரித்ததில் அவர் மீது சென்னை, திருப்பூர் சிவகங்கை, கோவை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதையும் கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து கார் மற்றும் இரண்டு ராயல் என்ஃபீல்ட் புல்லட் ,இரண்டு கார்கள் , இரண்டு பேஷன் ப்ரோ இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

Views: - 199

0

0