மேட்டுப்பாளையம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற முதியவர் : உரிய நேரத்தில் காப்பாற்றிய காவலர்கள்!!

10 November 2020, 5:52 pm
Mtp River - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தற்கொலைக்கு முயன்ற முதியவரை மீட்ட போலீசார் அவரை பத்திரமாக அவரது மகனிடம் ஒப்படைத்தனர்.

கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ராமு (பெயர் மாற்றப்பட்டுள்ளது). குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டை விட்டு சென்ற ராமு தனது மகனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தான் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார்.

அதிர்ச்சியடைந்த ராமுவின் மகன் இதுகுறித்து மேட்டுப்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில் மேட்டுப்பாளையம் காவல்துறை உதவி ஆய்வாளர் மணிகண்டன், தலைமை காவலர் தங்கவேல், முதுநிலை காவலர் தங்கராஜ் ஆகியோர் பத்திரகாளியம்மன் கோவில் அருகே உள்ள பத்திரகாளியம்மன் ஆற்றுப்பாலத்திற்கு சென்றனர்.

மேலும், அங்கு தற்கொலைக்கு முயன்ற ராமுவை மீட்டு அறிவுரை கூறி அவரது மகனிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து ராமுவின் மகன் அவரை வீட்டிற்கு அழைத்துச்சென்றார். இந்த சம்பவத்தை தொடர்ந்து மேட்டுப்பாளையம் போலீசாரை காவல் உயர் அதிகாரிகள் பாராட்டியுள்ளனர்.

Views: - 19

0

0