துக்க நிகழ்வின் போது முதியவர் கொலை செய்யப்பட்ட விவகாரம் : 10 ஆண்டுகளுக்கு பிறகு 4 பேருக்கு ஆயுள் தண்டனை!!

Author: Udayachandran RadhaKrishnan
14 September 2021, 9:38 am
10 Years Judgement -Updatenews360
Quick Share

விழுப்புரம் : கடந்த 2011 ல் உளுந்தூர்பேட்டை அருகே துக்க நிகழ்வின் போது நடந்த மோதலில் முதியவரை கொலை செய்த 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு உளுந்தூர்பேட்டை அருகே கொரட்டூர் கிராமத்தில் மாரிமுத்து என்ற பெண் இறந்து 16வது துக்க நாள் நிகழ்வின் போது கொரட்டூர் கிராமத்தைச் சேர்ந்த காசி என்ற முதியவருக்கும் இறந்த மாரிமுத்துவின் உறவினர் பெரும்பாக்கம் கிராமத்தை சேர்ந்த பாவடை, பக்கிரிசாமி தரப்பிற்கும் ஏற்பட்ட வாய்த்தகராறில் முதியவர் காசி (வயது 60) அடித்து கொலை செய்யப்பட்டார்.

கொலை செய்யப்பட்ட வழக்கில், பெரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பக்கிரிசாமி, பாவாடை, கஜேந்திரன், குபேந்திரன் ஆகிய 4 பேர் மீது திருநாவலூர் போலிசார் வழக்குப்பதிவு செய்து வழக்கு விசாரணை நடத்தினர்.

கடந்த 10 ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தன. விசாரணை முடிந்து தீர்ப்பளித்த நீதிபதி செங்கமலை செல்வன் குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். இதை தொடர்ந்து 4 பேரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்

Views: - 137

0

0