கட்டுமான பணியின்போது விபத்து: சாரம் சரிந்து விழுந்து முதியவர் பலி..வேலைக்கு வந்த இடத்தில் சோகம்..!!

Author: Rajesh
29 April 2022, 4:18 pm
Quick Share

கோவை: கட்டுமான பணியின்போது பொருட்கள் சரிந்து விழுந்ததில் முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் வீரப்பநாயக்கன் பட்டியை சேர்ந்தவர் சின்னக்கண்ணு (77). இவர் தனது குடும்பத்தினருடன் கோவை பீளமேடு ராமானுஜம் நகரில் தங்கி கட்டிட வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில், நேற்று சின்னக்கண்ணு வெள்ளலூர் ரோடு கனகசபாபதி நகரில் உள்ள ஒரு கட்டிடத்தில் வேலை செய்து கொண்டிருந்ததார். அப்போது, எதிர்பாராத விதமாக கட்டிட பணிக்காக வைக்கப்பட்டிருந்த கட்டுமானம் சரிந்து சின்னக்கண்ணு தலை மீது விழுந்தது.

இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சைபலனின்றி முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

புகாரின் பேரில், போத்தனூர் போலீசார், உரிய பாதுகாப்பு உபகரணங்களின்றி பணிக்கு அமர்த்திய கட்டிட உரிமையாளர் ராஜ் என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Views: - 640

0

0