தேர்தல் நடத்தை விதிகள் அமல் : ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து!!

1 March 2021, 11:41 am
Petition day Cancel -Updatenews360
Quick Share

கோவை : தேர்தல் நடத்தை விதிகள் அமலானதை தொடர்ந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காரணத்தால் இவ்வகையான கூட்டங்கள் நடத்த அனுமதியில்லை.

மேலும், பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிக்கும் விதமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அந்த பெட்டியினுள் தங்களது கோரிக்கை மனுக்களை செலுத்தி வருகின்றனர்.

Views: - 8

0

0