தேர்தல் ஆணையம் தொடர்ந்த வழக்கு : பொன்.ராதாகிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்!!
Author: Udayachandran RadhaKrishnan10 August 2021, 2:14 pm
கன்னியாகுமரி : நாகர்கோவில் நீதிமன்றத்தில் பாஜக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதா கிருஷ்ணன் நேரில் ஆஜர். 2019 ஆம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்தின் போது தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தொடர்ந்த வழக்கின் விசாரணைக்காக இன்று நேரில் ஆஜரானார்.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தின்போது கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் இந்து மகாசபை தலைவர் பாலசுப்பிரமணியன் பேசும் போது இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு பாஜக வேட்பாளர் பொன் ராதாகிருஷ்ணனுக்கு வாக்களிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்தார்.
இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜசேகர் ராஜக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார் அந்த புகாரின் அடிப்படையில் முன்னாள் மத்திய அமைச்சரும் அப்போதைய பாஜக வேட்பாளருமான பொன் ராதாகிருஷ்ணன், இந்து மகாசபை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மீது தேர்தல் பிரிவு அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணைக்காக நாகர்கோவிலில் உள்ள கன்னியாகுமரி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து மகாசபை தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் இன்று நேரில் ஆஜரானார்கள். மேலும் இந்த வழக்கின் அடுத்த வாய்தா வருகிற 16-ஆம் தேதி நடைபெறும் என வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தார்.
0
0