கொரோனா நோயாளிகளும் தேர்தலில் வாக்களிக்கலாம் : வழிகாட்டு விதிமுறைகளை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!

4 March 2021, 5:29 pm
sathyapratha sahoo - updatenews360
Quick Share

வரும் சட்டப்பேரவை தேர்தலில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருபவர்களும் வாக்களிக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைக்கு வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வரும் வேளையில், தேர்தல் ஆணையமும் தடபுடலான பணிகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா தொற்று அச்சுறுத்தல் இருப்பதால் மிகுந்த பாதுகாப்புடன் தேர்தலை நடத்துவதில் முழு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதனிடையே, தமிழகத்தில் சுமார் 4 ஆயிரம் பேர் கொரோனா தொற்று பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்கள், இந்தத் தேர்தலில் வாக்களிக்க முடியுமா..? என்ற கேள்வி எழுந்தது.

Corona_Workers_UpdateNews360

இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலில், கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் வாக்களிக்க ஒரு மணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல் தெரிவித்துள்ளார்.

மேலும், அவர் கூறியதாவது : கடைசி ஒரு மணி நேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள், கவச உடை அணிந்து வாக்களிக்கலாம் என்று கூறிய அவர், தமிழகம் முழுவதும் மார்ச் 3ம் தேதி வரை ரூ.11 கோடி மதிப்பிலான பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Views: - 5

0

0