118 தேர்தல் செலவின பார்வையாளர்கள் நாளை தமிழகம் வருகை: சத்யபிரதா சாஹூ தகவல்..!!

Author: Aarthi Sivakumar
11 March 2021, 3:44 pm
sathyaprathasahoo - updatenews360
Quick Share

சென்னை : தேர்தல் செலவின பார்வையாளர்கள் 118 பேர் நாளை தமிழகம் வர உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் பணிகளில் மும்முரமாக இறங்கியுள்ளன. தேர்தல் ஆணையம் சார்பில், நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.

வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படைகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது,

தேர்தல் செலவின பார்வையாளர்கள் 118 பேர் நாளை தமிழகம் வர உள்ளனர். இதுவரை தமிழகத்திற்கு 65 கம்பெனி துணை ராணுவப்படை வந்துள்ளது. மாற்றுத்திறனாளிகள் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக, ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காவல்துறை மற்றும் பொதுப்பார்வையாளர்கள் வரும் 19ம் தேதி தமிழகம் வருகின்றனர்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 140

0

0