திருப்பூரில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு : தேர்தல் பணிகள் விறு விறு!!!

2 March 2021, 3:49 pm
election Work -Updatenews360
Quick Share

திருப்பூர் : சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த பின்பு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறை மற்றும் வாக்கு எண்ணும் மையத்தை மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திருப்பூரில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நிறைவடைந்த பின்னர் வாக்குப் பதிவு செய்யப்பட்ட இயந்திரங்கள் திருப்பூர் பல்லடம் சாலையில் உள்ள அரசு மகளிர் கல்லூரியில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் மேலும் அவ்விடத்திலேயே வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலரான விஜயகார்த்திகேயன் காவல்துறை மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுவினருடன் நேரில் ஆய்வு செய்து ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்

Views: - 12

0

0