டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல்: அமைச்சர் துரைமுருகன் தகவல்

Author: Udhayakumar Raman
25 September 2021, 11:30 pm
Duraimurugan- Updatenews360
Quick Share

வேலூர்: டிசம்பர் மாதம் மாநகராட்சி, நகராட்சிகளுக்கான தேர்தல் நடைபெறும் என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தலில் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்குப் போட்டியிட உள்ள திமுக வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்துப் பேசிய அமைச்சர் துரைமுருகன், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்தவுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படும் எனத் தமிழக நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறியுள்ளார். அக்டோபர் மாதம் முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்பட்டு, வரும் டிசம்பர் மாதம் முதல் நகராட்சி, மாநகராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Views: - 344

0

0