குளித்துக் கொண்டிருந்த பெண்.. சுவரை துளையிட்டு வீடியோ எடுத்த எலக்ட்ரீசியன் : அதிர்ச்சி சம்பவம்!

Author: Udayachandran RadhaKrishnan
6 November 2024, 4:33 pm

குளித்துக் கொண்டிருந்த பெண்ணை சுவர் வழியாக துளையிட்டு வீடியோ பதிவு செய்த நபரின் செயலால் அப்பகுதியினர் அதிர்ந்து போயுள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் அடுத்த முத்திப்பாளையம் அருகே காந்திஜி காலனியைச் சேர்ந்த அன்பரசு என்பவர் எலெக்ட்ரிசியனாக உள்ளார்.

இதையும் படியுங்க: மருத்துவம் பார்ப்பீர்களா அல்லது பாராயணம் பாட சொல்வீர்களா? திமுகவை அலறவிட்ட கம்யூ., எம்பி!

இவர் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டில் 44 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் குளியல் அறையில் குளித்துக் கொண்டு இருந்ததை குளியல் அறை சுவரில் இருந்த ஓட்டை வழியாக தனது செல்போனில் வீடியோ எடுத்து உள்ளார்.

இதனை திடீரென அறிந்த அந்த பெண் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். அவரது உறவினர்கள் அங்கு ஓடி வந்து குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்த அன்பரசுவை கையும், களவுமாக மடக்கிப் பிடித்தனர்.

பின்னர் அவரை தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதை அடுத்து பாதிக்கப்பட்ட 44 வயது பெண் கொடுத்த புகாரின் பேரில் தொண்டாமுத்தூர் காவல் துறையினர் அன்பரசுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரது செல்ஃபோன் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  • Coolie Movie Latest Updates கூலி படத்தின் சூப்பர் அப்டேட்… ரஜினி பிறந்தநாளில் லோகேஷ் அறிவிப்பு!
  • Views: - 387

    0

    0