எரியும் டயரை வீசி யானையைக் கொன்ற இருவருக்கு 15 நாள் சிறை காவல் : கூடலூர் நீதிமன்றம் உத்தரவு

23 January 2021, 12:30 pm
Quick Share

நீலகிரி : எரியும் டயரை வீசியதால் காதுப் பகுதிகளில் காயமடைந்த காட்டு யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 2 பேருக்கு 14 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காதில் ஏற்பட்டிருந்த தீக்காயத்துடன் சுற்றித்திரிந்த 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கடந்த 19ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. ஆனால், லாரியில் ஏற்றப்பட்டு முதுமலை முகாமுக்கு கொண்டுச் செல்லும் வழியில் காட்டு யானை பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் உடலுக்கு 21ம் தேதி உடற்கூராய்வு செய்யப்பட்டது

இதில், யானையின் காது பகுதியில் தீ வைக்கப்பட்டதற்கான அடையாளங்கள் காணப்பட்டன. தீ காயத்தால் யானையின் காதில் உள்ள நரம்புகள் அறுபட்டு அதிலிருந்து ரத்தம் வெளியேறியது கண்டறியப்பட்டுள்ளது. ரத்தம் அதிகளவில் வெளியேறியதால் அனீமியா ஏற்பட்டு, யானை உயிரிந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து யானை சுற்றியிருந்த பகுதிகளில் வனத்துறையினர் சிறப்பு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

elephant fire - updatenews360

மசனகுடி பகுதியில் விசாரணை மேற்கொண்டபோது, ஊருக்குள் உணவு தேடி வந்த காட்டு யானை மீது, இருசக்கர வாகனத்தின் டயரில் தீ வைத்து யானை மீது வீசியது தெரியவந்தது இதனையடுத்து, அங்கு இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், மசினகுடி பகுதியைச் சேர்ந்த ரெசார்ட் உரிமையாளர் ரைமன் மற்றும் அவரது நண்பர் பிரசாந்த் ஆகியோரை பிடித்து வனத்துறை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் உணவு தேடி பிரசட் பகுதிக்குள் வந்த காட்டு யானை மீது டயரில் தீ பற்ற வைத்து வீசியது வீசி அதை ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, அவர்கள் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், காட்டு யானை உயிரிழக்கக் காரணமாக இருந்த 2 பேருக்கு 15 நாட்கள் சிறை தண்டனை விதித்து கூடலூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Views: - 8

0

0