காரை துரத்திய காட்டு யானை : ஓட்டுநர் நூலிழையில் உயிர் தப்பிய வீடியோ.!!

17 August 2020, 7:47 pm
Sathy Elepahtn Escape - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி பகுதியில் வாகன ஓட்டிகளை துரத்திய ஒற்றை யானையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த தாளவாடி மலைப் பகுதியிலிருந்து அடர்ந்த வனப்பகுதியில் தலமலை அமைந்துள்ளது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட இந்தப் பகுதியில் ஏராளமான யானைகள் புலிகள் மான்கள் உள்ளிட்ட விலங்குகள் உள்ளன.

இவை அவ்வப்போது உணவு தேடியும் நீர் அருந்தவும் வனப்பகுதியை விட்டு சாலை பகுதிக்கு வருவது வழக்கம். இந்நிலையில் இன்று சத்தியமங்கலம் – தாளவாடி சாலை அருகே ஒற்றை யானை ஒன்று அவ்வழியாக வந்த வாகனங்களை துரத்தியது. இதில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் வாகனத்தை அப்படியே கீழே போட்டு விட்டு உயிர் தப்பினர்.

மேலும் காரை துரத்தி வந்த யானையை கண்டு அதிர்ந்த கார் ஓட்டுனர் சாமார்த்தியமாக பின்புறமாக காரை நகர்த்தி உயிர் தப்பினார். சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த யானை பின்னர் வனப்பகுதிக்குள் சென்று மறைந்தது. இதனால் அப்பகுதியில் சிறுது நேரம் போக்குவரத்து தடைபட்டது.

Views: - 1

0

0