புதுச்சேரியில் அரசு அலுவலகத்தில் உயரதிகாரியை தாக்கிய ஊழியர் : பரபரப்பு சிசிடிவி காட்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
31 July 2021, 9:58 am
Govt Staff Fight - Updatenews360
Quick Share

புதுச்சேரி : சுகாதாரத்துறை அரசு அலுவலகத்தில் உயர் அதிகாரியை ஊழியர் ஒருவர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

புதுச்சேரி கோரிமேட்டில் மதர் தெரேசா சுகாதார கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கே பணியாற்றும் அலுவலக கண்காணிப்பாளர் கோவிந்தராஜ் பற்றி சிலர் அவதூறாக மொட்டை கடிதாசி சுகாதாரத் துறைக்கு அனுப்பி உள்ளனர்.

இதுதொடர்பாக அவர் அலுவலகத்தில் கேட்டுக் கொண்டிருந்தபோது அங்கு வந்த கடைநிலை ஊழியர் ராமன் என்பவர் மீது சந்தேகம் கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

ஒருகட்டத்தில் ஆத்திரமடைந்த ராமன் உயரதிகாரி என்று கூட பார்க்காமல் கண்காணிப்பாளரை அடித்து கீழே தள்ளி வைத்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சிசிடிவி பதிவாகி உள்ளது. இதன் அடிப்படையில் சுகாதார அறிவியல் நிறுவனம் தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

Views: - 499

0

0