இன்று தொடங்குகிறது என்ஜினீயரிங் துணை கலந்தாய்வு: 9 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பம்..!!
Author: Aarthi Sivakumar21 October 2021, 9:13 am
சென்னை: 9 ஆயிரத்து 455 மாணவர்கள் விண்ணப்பித்துள்ள என்ஜினீயரிங் படிப்புக்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.
என்ஜினீயரிங் படிப்புக்கான கலந்தாய்வு கடந்த மாதம் 17ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் சிறப்பு பிரிவு, அதனையடுத்து பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 440 என்ஜினீயரிங் கல்லூரிகளில் உள்ள மொத்தம் ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்களுக்கு இந்த கலந்தாய்வு நடத்தப்பட்டு வருகிறது. சிறப்பு பிரிவு மற்றும் பொதுப் பிரிவினருக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிவில், 89 ஆயிரத்து 187 இடங்கள் நிரம்பி இருந்தன.
இதையடுத்து மீதம் உள்ள இடங்களை நிரப்புவதற்கான துணை கலந்தாய்வு இன்று தொடங்க உள்ளது. இந்த கலந்தாய்வுக்கு 9 ஆயிரத்து 455 மாணவ – மாணவிகள் விண்ணப்பப்பதிவு செய்திருக்கின்றனர். நாளை மாலை 5 மணி வரை விருப்பக் கல்லூரிகளை தேர்வு செய்வதற்கு அவகாசம் வழங்கப்பட்டு உள்ளது.
அதனையடுத்து, நாளை மறுதினம் தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை வெளியிடப்படும். அதனை அன்றைய தினமே உறுதி செய்வதற்கும் மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இறுதியாக 24ம் தேதி இறுதி ஒதுக்கீட்டு ஆணையுடன் துணை கலந்தாய்வு நிறைவு பெறுகிறது.
0
0