கோவை துணை மேயரானார் திமுகவின் வெற்றிச்செல்வன்: பதவியேற்ற பின் துணை மேயர் நாற்காலியில் தாயை அமரவைத்து நெகிழ்ச்சி..!!

Author: Rajesh
4 March 2022, 6:05 pm
Quick Share

கோவை: கோவையின் புதிய துணை மேயராக பதவியேற்ற வெற்றிச் செல்வன் துணை மேயர் இருக்கையில் தாயை அமரவைத்து அழகு பார்த்து வீடியோ வெளியாகியுள்ளது.

கோவையில் இன்று காலை மேயருக்கான மறைமுக தேர்தல் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், திமுக மாமன்ற உறுப்பினர்கள் 96 பேர் மற்றும் ஒரு எஸ்.டி பி.ஐ மாமன்ற உறுப்பினர் என மொத்தம் 97 பேர் சேர்ந்து ஒரு மனதாக கல்பனா ஆனந்தகுமாரை மேயராக தேர்வு செய்தனர்.

இந்த சூழலில், இன்று மதியம் துணை மேயருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில், திமுக சார்பில் வெற்றிச்செல்வன் துணை மேயர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து இன்று அவரை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் துணை மேயராக தேர்வு செய்தனர். இந்த சூழலில், வெற்றிச் செல்வன் இன்று மாநகராட்சி துணை மேயராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

அதன்படி, கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமாரும், துணை மேயராக வெற்றிச் செல்வனும் பதவியேற்றுக் கொண்டனர். பதவியேற்ற பின் துணை மேயர் நாற்காலியில் தனது தாயை முதலில் அமர வைத்து அழகு பார்த்த நிகழ்வு அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

Views: - 651

0

0