வேல் யாத்திரை துவங்க வந்த பாஜக தலைவர் முருகனுக்கு உற்சாக வரவேற்பு : போலீசாருடன் வாக்குவாதம்!!

8 November 2020, 2:18 pm
Murugan Crowd - Updatenews360
Quick Share

திருவள்ளூர் : வேல் யாத்திரை துவங்க வருகை தந்த பாஜக தலைவர் எல்.முருகனுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்த போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவொற்றியூர் வடிவுடை அம்மன் கோவிலுக்கு பாஜக மாநில தலைவர் முருகன் வெற்றிவேல் யாத்திரை துவங்க வருகை தர உள்ளதால் அவரை வரவேற்க ஏராளமான தொண்டர்கள் பல்வேறு வாகனங்களில் வந்தனர்.

இந்த நிலையில் சென்னை திருவொற்றியூர் மணலி சாலையில் 20-க்கும் மேற்பட்ட வாகனங்களில் வந்த பாஜகவினரை திருவொற்றியூர் போலீசார் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

வாகனத்தில் நிற்காமல் தடுப்பு வேலிகளை அகற்றி பெரும்பாலானவர்கள் வாகனத்தை சாலையிலே விட்டு விட்டு நடந்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை தடுக்க முடியாமல் திணறினர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

Views: - 13

0

0