உயிரிழந்த மாணவரின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய ஈபிஎஸ் : மாணவரின் பெற்றோருக்கு ஆறுதல்!!!

Author: Udayachandran RadhaKrishnan
12 September 2021, 2:13 pm
EPS Anjali - Updatenews360
Quick Share

சேலம் : உயிரிழந்த மாணவர் தனுஷின் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இன்று நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சார்ந்த தனுஷ் 2 முறை நீட் தேர்வு எழுதி இரண்டு முறையும் தேர்வில் தோல்வியுற்ற நிலையில், மூன்றாவது முறையாக இன்று நீட் தேர்வு எழுத இருந்தார்.

இதனால், மீண்டும் தேர்வில் தோல்வியடைந்துவிடுமோ என்ற பயத்தில் தனுஷ் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த மாணவரின் உடல் அவரது வீட்டில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி உயிரிழந்த மாணவர் தனுஷின் வீட்டிற்கு நேரில் சென்று மாணவரின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Views: - 218

0

0