எரிந்த நிலையில் ஆண் சடலம்.!

8 August 2020, 5:13 pm
Erode Dead - Updatenews360
Quick Share

ஈரோடு : எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு அருகே கருங்கல்பாளையம் கணபதி புரத்தில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக கிடப்பதாக அப்பகுதியினர் கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

சம்பவ பகுதிக்கு வந்த சம் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஈரோடு மாநகர துணை காவல் கண்காணிப்பாளர் ராஜு சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார் .

எரிந்த நிலையில் மீட்கப்பட்ட நபர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர் எரிந்த நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 8

0

0