“மாணவர்களின் மனிதக் கடவுளே“ : முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து மாணவர்கள் மீண்டும் போஸ்டர்!!

3 September 2020, 5:10 pm
CM Poster - Updatenews360
Quick Share

ஈரோடு : மாணவர்களின் மனித கடவுளே என முதல்வர் பழனிச்சாமிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ஈரோட்டின் பல்வேறு பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

தமிழகத்தில் கெரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமுடக்கம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் சுமார் ஐந்து மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இதனால் பள்ளிகளில் தேர்வுகள் இன்றி தேர்ச்சி அறிவிக்கப்பட்டது இதனையடுத்து கல்லூரி இறுதி ஆண்டு தேர்வு தவிர்த்து மற்ற ஆண்டு மற்றும் அரியர் தேர்வுக்கு விண்ணப்பித்த அனைவரும் தேர்ச்சி என தமிழக அரசு அறிவிப்பு அறிவித்திருந்தது.

இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் ஒட்டப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் கடந்த வாரம் கொல்லம்பாளையம் ரயில்வே நுழைவு பாலம் அருகே முதல்வருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.

இதனை தொடர்ந்து இன்று மேட்டூர் சாலை, ரவுண்டானா மற்றும் பிரப்சாலை ஆகிய பகுதிகளில் “மாணவர்களின் மனித கடவுளே என்றும் எங்கள் ஓட்டு உங்களுக்கே” என முதல்வரின் உருவம் பொறித்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

Views: - 0

0

0