ஈரோடு இடைத்தேர்தல் நடத்திய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை திடீர் ரெய்டு… பரபரப்பில் ஈரோடு மாவட்டம்..!!

Author: Babu Lakshmanan
21 March 2023, 4:30 pm
Quick Share

ஈரோடு இடைத்தேர்தல் நடத்திய அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருவதால் பரபரப்பு நிலவி வருகிறது.

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி நடைபெற்றது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 2ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 1,10,556 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 43,981 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.

இந்த இடைத்தேர்தலை ஈரோடு மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான சிவக்குமார் நடத்தி முடித்தார். இந்த நிலையில், ஈரோடு மாநகராட்சி ஆணையராக இருக்கும் சிவக்குமாரின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தி வருகின்றனர். காரில் வந்த அதிகாரிகள் சிலர், ஆணையர் சிவக்குமாரின் வீட்டின் உள்ளே சென்று சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லாவரம் நகராட்சி ஆணையராக இருந்த போது முறைகேட்டில் ஈடுபட்ட புகார் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

Views: - 162

0

0