சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து… நெஞ்சை பதறவைக்கும் சிசிடிவி காட்சி…

Author: kavin kumar
7 February 2022, 8:48 pm
Quick Share

ஈரோடு : கோபிசெட்டிபாளையதில் தாயுடன் சாலையை கடக்க முயன்ற போது 8 வயது சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்துக்குள்ளான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அத்தாணி பகுதியை சேர்ந்தவர் மயில்வாணன், தெய்வப்பிரியா தம்பதிகளுக்கு, ஹரினீஷ் என்ற 8 வயது மகனும் ரூபன் என்ற 5 வயதுடைய மகனும் உள்ளனர். இந்நிலையில் மயில்வானான் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடன் கோபி பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கடைக்கு ஜவுளி எடுப்பதற்காக சென்றனர். அப்போது சாலையின் ஒரு புறத்தில் மயில்வாணன் நின்று கொண்டு தனது மனைவி தெய்வப்ரியா மற்றும் இரண்டு குழந்தைகளை ஜவுளிக்கடைக்கு செல்லுமாறு அனுப்பியுள்ளார். அப்போது தெய்வப்ரியா தனது குழந்தைகளுடன் சாலையை கடக்க முயன்ற போது எதிர் பாராத விதமாக பின்னால் வந்த இருசக்கர வாகனம் ஹர்னீஷ் மீது வேகமாக மோதியது.

இந்த விபத்தில் இரு சக்கர வாகனம் குழந்தை ஹரினீஷ் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டு தலையில் பலத்த காயங்களுடன் சாலையில் உருண்டு விழுந்தார். தலையில் பலத்த காயத்துடன் மயங்கி விழுந்த சிறுவன் ஹரினீசை அக்கம்பக்கத்தினார் மீட்டு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில் இருசக்கரவாகனத்தை ஓட்டி வந்த நபர், அக்கம் பக்கம் இருந்தவர்கள் குழந்தைகளை விபத்தில் சிக்கியதை பார்த்துக்கொண்டிருந்த நேரத்தில் இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து கோபி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற நபரை சம்பவம் நடந்த இடத்தில் கிடைத்த சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் தேடி வருகின்றனர்.

Views: - 487

0

0