ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பாதையில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பாதையில் வரட்டுப்பள்ளம் அணைப்பகுதியில் நேற்று முன்தினம் கர்கேகண்டியில் இருந்து பவானி நோக்கி வந்த தனியார் பேருந்து, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி கர்நாடக மாநிலம் சென்று கொண்டிருந்த லாரி மீதும் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்து குறித்தான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சிசிடிவி காட்சிப்பதிவில் பர்கூர் மலைப்பாதையில் லாரி ஒன்று பிரேக் டவுன் ஆகி இடது புறமாக நின்று கொண்டு இருந்துள்ளது, அப்போது தனியார் பேருந்தின் ஓட்டுநர் நின்று செல்லாமல் வேகத்தில் அதனை ஓவர்டேக் செய்த போது, எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீதும் தொடர்ந்து லாரி மீதும் மோதி நிற்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
விபத்து தொடர்பாக தனியார் பேருந்தின் ஓட்டுநர் பாலாஜி மீது பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் லாரி ஓட்டுனர் சகாதேவன் (46), இருசக்கர வாகன ஓட்டுனர் தனபால் (55), ஆகிய இருவரும் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், மேலும், பேருந்தில் 30க்கும் மேற்பட்டோர் பயணித்த நிலையில் ஐந்து பேருக்கு மட்டும் லேசான காயங்கள் ஏற்பட்டது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.