தொடர் கனமழையால் மணியாச்சி ஓடையில் வெள்ளப்பெருக்கு: வனவிலங்குகளின் நீர் தேவை பூர்த்தி..சமூக ஆர்வலர்கள் மகிழ்ச்சி!!
Author: Babu Lakshmanan28 August 2021, 11:15 am
ஈரோடு: பர்கூர் மலைப் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக, மணியாச்சி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மிதமானது முதல் கனமழை பெய்தது.
இதில், பர்கூர் மேற்கு மலைப் பகுதியில் உள்ள கொங்காடை, ஓசூர், மணியாச்சி உள்ளிட்ட பல இடங்களில் தொடர் மழை பெய்தது.
இதன் காரணமாக மணியாச்சி ஓடையில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.
மேலும் மலைப் பகுதியில் மழை பெய்ததால் மரங்கள் செடிகள் ஆகியன பசுமையாக காட்சி அளிக்கின்றன.
இதுதவிர பர்கூர் மலைப்பகுதியில் உள்ள வன குட்டைகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் வன விலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தியாகியுள்ளது.
Views: - 242
0
0