10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான பிறகே பள்ளியில் சேர்க்கை நடைபெற வேண்டும் : அமைச்சர் எச்சரிக்கை.!

23 May 2020, 1:03 pm
Erode sengottayan - Updatenews360
Quick Share

ஈரோடு : பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்றும், அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அயலூர் அளுக்குளி கலிங்கியம் ஆகிய பஞ்சாயத்துகளில் ரூ.10.80 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்படும் சாக்கடை மற்றும் ஆழ்துளைகிணறு அமைக்கும் பணியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமிபூஜையுடன் தொடங்கிவைத்தார். அதனைதொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் 21 பஞ்சாயத்துகளுக்கு நைசால் கிருமி நாசினி பிளீச்சிங் பவுடர் மற்றும் பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், பத்தாம் வகுப்பு பொது தேர்வு நடந்து முடிந்து முடிவுகள் வெளியான பிறகே அனைத்து பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் அதற்கு முன்பாக தனியார் பள்ளிகளில் சேர்க்கை நடைபெற்றால் அந்த பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு தேர்வுக்காக சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னை, திருவள்ளூர், அரியலூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் பணிரெண்டாம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஆசிரியர்கள் செல்ல மறுப்பதால் விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு அனுப்படும் பள்ளி துவங்கும் முன்பே தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகுத்த ஆதாராத்துடன் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்.

விளாங்கோப்பை மலைவாழ்மக்களை சந்திக்கவில்லை என்றும் அங்கு பள்ளி அமைக்கவில்லை என்றும் திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்புராயனின் குற்றச்சாட்டிற்கு மலைக்கிராமத்திற்கு சாலை அமைக்க நிதிகள் ஒதுக்கப்பட்டு டெண்டர் விடப்பட்டுள்ளது. ஜூன் 3 ந்தேதி அதற்கான பணிகள் தொடங்கவுள்ளது என்றும் பள்ளி அமைக்க வனத்துறையிடம் 50 செண்ட் நிலம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது என்றும் தற்போது என்.ஜி.ஓகள் மூலம் அந்தப்பகுயில் பள்ளி செயல்பட்டுவருவதாகவும் அந்த மாணவர்களுக்கு தேவையான உணவு படப்புத்தகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பதிலளித்துள்ளார்.