பேருந்திற்கு காத்திருந்தவருக்கு கத்தி குத்து: மது போதையில் நடந்த விபரீதம்

30 November 2020, 10:21 pm
Quick Share

ஈரோடு: ஈரோட்டில் மதுபோதையில் பேருந்து நிறுத்தத்தில் நின்றுகொண்டிருந்த நபரின் கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் வெங்கமேடு காமராஜர் தெருவை சேர்ந்தவர் விஜய். இவர் சாலையோரங்களில் கல்லால் ஆன கைவினை பொருட்களை தயாரித்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஈரோடு ரயில் நிலையம் அடுத்துள்ள ஃபயர் சர்வீஸ் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த போது , மதுபோதையில் அங்குவந்த நபர் விஜயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். திடீரென மதுபோதையில் இருந்த நபர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் விஜயின் கழுத்தில் குத்தினார்.

இதில் காயமடைந்து ரத்த வெள்ளத்தில் துடித்துக்கொண்டிருந்த விஜயை அக்கம்பக்கத்தினர் மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கத்தியால் குத்திய நபரை பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். கத்தியால் குத்திய நபர் ரங்கம்பாளையத்தை சேர்ந்த குணா என்பதும், இவர் பெயிண்டராக தொழில் செய்து வருகிறார் என்பது காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 0

0

0