அழகை ரசிக்க தூண்டும் மலை! பசுமையாக காட்சி தரும் கடம்பூர்.!!

4 August 2020, 1:14 pm
Sathy Kadamboor - Updatenews360
Quick Share

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த கடம்பூர் மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மலைப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதி அடர்ந்த வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் மான், யானை, சிறுத்தை, காட்டெருமை, உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன. கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை இல்லாத காரணத்தினால் வனப்பகுதி முழுவதும் வறண்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக கடம்பூர் மலைப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கடம்பூர் மலைப்பகுதி முழுவதும் உள்ள மரங்கள் துளிர் விட்டு பசுமையாக காட்சி அளிக்கின்றன.

மேலும் அப்பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் சாரல் மழையின் காரணமாக சில்லென்ற குளிர் காற்றுடன் இயற்கையான குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுவதால் அச்சாலை வழியாக செல்வோரை பசுமையான இயற்கை சூழல் மிகவும் கவர்ந்துள்ளது. இதனால் அச்சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே நின்று இயற்கை அழகை ரசிப்பதோடு தங்கள் செல்போன் மூலம் புகைப்படங்கள் எடுத்துச் செல்கின்றனர்.

Views: - 22

0

0

1 thought on “அழகை ரசிக்க தூண்டும் மலை! பசுமையாக காட்சி தரும் கடம்பூர்.!!

Comments are closed.