பாலியல் தொல்லை தந்த மேலாளர்.. மிளகாய் பொடி ட்ரீட்மெண்ட் தந்த பெண்கள்..!

29 September 2020, 10:48 pm
Quick Share

கோவை: பாலியல் தொல்லை கொடுத்த நிறுவன மேலாளரை நண்பருடன் இணைந்து கட்டிபோட்டு மிளகாய் பொடியை தூவிய பெண்ணின் துணிகர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பல்லடம் அருகே அருள்புரம் பகுதியில் உள்ள பாச்சாங்காட்டுப்பாளையம் குட்டையில் அவிநாசி சூளை பகுதியைச் சேர்ந்த சிவக்குமார் என்பவரை கை, கால்களை, கட்டி தாக்கி, முகம், மற்று உடல் முழுவதும் மிளகாய் பொடியை தூவியுள்ளார்கள். பின்னர் காவல் அவசர எண் 100 க்கு போண் செய்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை பிடித்து கட்டிவைத்துள்ளதாக கூறியுள்ளனார். இதனையடுத்து சம்பவ இடத்திற்க்கு வந்த பல்லடம் காவல் துறையினர் சிவக்குமாரை மீட்டு, அங்கு நின்றுகொண்டு இருந்த பெண் உட்பட மூவரையும் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். பல திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை ஜேஜே மில்ஸ் என்ற பனியன் நிறுவனத்தில் சிவக்குமார், சங்கீதா, மற்றும் முகமது முனிர் மூவரும் பணியாற்றி வந்ததுள்ளனர். இதில் சிவகுமார், சங்கீதாவிற்க்கு தொடர்ந்து பாலியல் தொல்லைகளை கொடுத்து வந்ததாகவும், மேலும் அதற்கு உடன்படாததால் தங்களை பணிபுரிந்த இடத்தில் இருந்து வேலையை விட்டு நீக்கியதாகவும் கூறப்படுகறது. இதனால் ஆத்திரமடைந்த சங்கீதாவும், அவருடைய நண்பர் முனீரும், சேர்ந்து ஆசைவார்த்தை கூறி சிவகுமாரை பல்லடம் வரவழைத்து அவரை கட்டிபோட்டு தாக்கியதையும் மிளகாய் பொடி தூவியதையும் ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து போலீசார் ஆள்கடத்தல் உட்பட நான்கு பிரிவுகளின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதேபோல் சங்கீதா கொடுத்த பாலியல் புகாரின் பேரில் சிவக்குமார் மீது பெண் வன்கொடுமை சட்டம் உட்பட இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பின்னர் மூவரையும் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சூழலில் வீர மங்கை சங்கீதா, சிவக்குமாரை கட்டிபோட்டு உடலில் மிளகாய்பொடி தூவும் வீர தீர செயல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Views: - 6

0

0